Loading...
 

நிபந்தனைகள் உடைய கிளப்புகள்

 

உறுப்பினருரிமை

பெயரில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல், நிபந்தனைகள் உடைய கிளப்புகளில் சில தேவைகளை அல்லது நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் நபர்கள் மட்டுமே உறுப்பினர்களாக ஆக முடியும். இந்தத் தேவைகள் பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன:

  • தொழில்முறை ரீதியானது - தொழில்முறை சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமே இந்தக் கிளப்பில் சேரலாம்.
  • கல்வி ரீதியானது - கல்வி ரீதியாக அல்லது தொழில்முறை ரீதியாக குறிப்பிட்ட சாதனை அளவை எட்டிய உறுப்பினர்கள் மட்டுமே இந்தக் கிளப்பில் சேரலாம்.

இந்தத் தேவைகள் பொதுவாக இருக்க வேண்டும், மேலும் இது ஃபவுண்டேஷனின் மைய கொள்கைகள் அல்லது துணைச் சட்டங்களுக்கு எதிராக செல்லக்கூடாது.

பொதுவாக, எந்தவொரு நபரும், அவர்களின் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், தங்களின் சொந்த முயற்சி மற்றும் விருப்பத்தின் மூலம் அதை நிறைவேற்ற முடிந்தால் அந்தக் கட்டுப்பாடுகள் செல்லுபடியாகும்.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது இயக்கத்தில் உறுப்பினருரிமை பெறுவது அத்தகைய அமைப்பு பாகுபாடற்றதாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது: Agora -வை பொருத்தவரை, ஆண்களுக்கு மட்டுமேயான கிளப்பிற்கும், ஆண்களை மட்டுமே அனுமதிக்கும் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே உறுப்பினர்களாக இருக்க முடிகிற கிளப்பிற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு கிளப்புகளுமே பாரபட்சமாக செயல்படுவதாக கருதப்படுகிறது, மேலும் அவை அனுமதிக்கப்படுவதில்லை.

அனுமதிக்கப்படுகிற மற்றும் அனுமதிக்கப்படாத கட்டுப்பாடுகளின் சில உதாரணங்கள் இதோ இங்கே. அனுமதி இல்லாத கட்டுப்பாடுகளுக்கு, அதன் காரணம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  • மருத்துவர்களுக்கு மட்டுமேயானது
  • வழக்கறிஞர்களுக்கு மட்டுமேயானது
  • பாய் ஸ்கவுட் உறுப்பினர்களுக்கு மட்டுமேயானது (பெயரில் பாய் ஸ்கவுட் என்றிருந்தாலும், பாய் ஸ்கவுட்ஸ் ஆஃப் அமெரிக்கா என்கிற கிளப் 2018 முதல் சிறுமிகளையும் அனுமதிக்கிறது)
  • மென்சா உறுப்பினர்களுக்கு மட்டுமேயானது
  • ஆண்களுக்கு மட்டுமேயானது (பாலினத்தின் அடிப்படையிலான பாகுபாடு)
  • பெண்களுக்கு மட்டுமேயானது (பாலினத்தின் அடிப்படையிலான பாகுபாடு)
  • ஸ்பானிஷ் நாட்டினருக்கு மட்டுமேயானது (தேசியத்தின் அடிப்படையில் பாரபட்சமானது)
  • கிறிஸ்தவர்களுக்கு மட்டுமேயானது (மதத்தின் அடிப்படையிலான பாகுபாடு)
  • PMP- சான்றிதழ் பெற்ற திட்ட மேலாளர்களுக்கு மட்டுமேயானது
  • IEEE உறுப்பினர்களுக்கு மட்டுமேயானது
  • இயற்பியலாளர்களுக்கு மட்டுமேயானது
  • அடிப்படை கல்வி வரிசை அமைப்பை நிறைவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமேயானது
  • தொழில்முறை பேச்சாளர்களுக்கு மட்டுமேயானது
  • சமதர்மவாத கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமேயானது (சித்தாந்தத்தின் அடிப்படையில் பாரபட்சமானது)
  • தொழில்முறை ஜோதிடர்கள் (அறிவியலை பிரபலப்படுத்துதல் மற்றும் விமர்சன ரீதியான சிந்தனை என்னும் துணை விதிகளுக்கு எதிரானது)
  • ஈரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டுமேயானது (பாலியல் நோக்குநிலையின் அடிப்படையிலான பாகுபாடு)
  • தாய்மார்களுக்கு மட்டுமான கிளப் (பாலினத்தின் அடிப்படையிலான பாகுபாடு)

 

இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் ஒவ்வொரு நாட்டையும் பொறுத்ததாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.

உதாரணமாக, ஒரு நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வழக்கறிஞர்களாக ஆக அனுமதித்தால், வழக்கறிஞர்களுக்கு மட்டுமேயான கிளப் அனுமதி உடைய கிளப் ஆகும். இருப்பினும், அந்த நாட்டில் ஆண்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக ஆக முடியும் என்றால், ஒரு வழக்கறிஞர்களுக்கு மட்டுமேயான கிளப் அனுமதிக்கப்படாது.

வயது கட்டுப்பாடுகள்

பொது கிளப்புகளைப் போலவே, நிபந்தனைகள் உடையை கிளப்புக்கும் பொது இளைஞர் கிளப்புகளுக்கு விளக்கப்பட்ட அதே வரைமுறைகளின் கீழ் வயது வரம்பு இருக்கலாம்.

 

சந்திப்பு நடைபெறும் வளாகம்

உறுப்பினர்களுக்கு பாகுபாட்டின் கூடுதல் அடுக்காக செயல்படாத வரை நிபந்தனைகள் உடையை கிளப்புகள் சந்திப்புகளுக்கு அவை விரும்பும் இடங்களை தேர்வு செய்யலாம்.

 

விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள்

நிபந்தனைகள் உடைய கிளப்புகள் குறைந்தபட்சம் பின்வரும் அலுவலர்களிடமிருந்து வருகைகளை ஏற்க வேண்டும்:

  • Agora Speakers International ஃபவுண்டேஷன் உடைய அலுவலர்கள் மற்றும் Agora Speakers International இயக்குனர்கள் குழுவின் உறுப்பினர்கள் (தணிக்கை, இணக்கத்தன்மை சரிபார்ப்பு மற்றும் வழிகாட்டல் நோக்கங்களுக்காக)
  • Agora தூதர்கள்
நிபந்தனைகள் உடைய கிளப்பைப் பார்வையிட மேற்கண்ட அலுவலர்கள் கொண்டிருக்கும் உரிமையானது அவர்கள் விரும்பும் எந்தப் பாத்திரங்களையும் வகிக்கலாம் என்பதைக் குறிக்கவில்லை. கிளப்பின் சந்திப்பில் பார்வையாளர்கள் என்ன பாத்திரங்களை வகிக்கலாம் என்பதை வரையறுப்பது கிளப்பின் பொறுப்பே.

எங்களது பரிந்துரை பின்வருமாறு:

  • Agora தூதர்கள்: மதிப்பீடுகள், பிரிவு தலைமைப் பாத்திரங்கள் (எ.கா., விவாத நடுநிலையாளர், உடனடித் தலைப்பு சொற்பொழிவுகளின் தலைவர், முதலியன), மற்றும் பட்டறைகள்

பொது கிளப்புகளைப் போலல்லாமல், நிபந்தனைகள் உடைய கிளப்புகள் மற்ற கிளப்புகளிலிருந்தோ அல்லது பொது மக்கள் மத்தியிலிருந்தோ விருந்தினர்களை அழைக்க வேண்டிய தேவையில்லை (ஆனால் அவர்கள் விரும்பினால் அவ்வாறு செய்யலாம்), அவர்கள் உறுப்பினர் அளவுகோல்களை பூர்த்தி செய்வார்களா என்பதைப் பொருட்படுத்தாமல்.

நிதி ரீதியான விதிமுறைகள்

நிதி ரீதியான விஷயங்களைப் பொறுத்தவரை, நிபந்தனைகள் உடைய கிளப்புகள் பொது கிளப்புகளின் அதே விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இருப்பினும், பொது கிளப்புகளைப் போலல்லாமல், நிபந்தனைகள் உடைய கிளப்புகள் Agora Speakers International -க்கு ஒரு உறுப்பினர் ஒருவருக்கு வருடாந்த கட்டணமாக $ 40 (அமெரிக்க டாலர்) செலுத்துகின்றன. கட்டணமானது உறுப்பினர் சேரும் தேதியில் செலுத்தப்படுகிறது, மேலும் இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

 

பட்டியல் ரீதியான விதிமுறைகள்

நிபந்தனைகள் உடைய கிளப்புகளைப் பற்றி பின்வரும் தகவல்கள் பகிரப்படுகின்றன, எனவே இவை கிளப் அதிகாரிகளால் புதுப்பித்த நிலையில் வைக்கப்பட வேண்டும்.

 

பகிரப்படும் கிளப் தகவல்
தகவல் வகை பகிரப்படும் விதம்
கிளப்பின் பெயர், எண் மற்றும் சாசன தேதி பொதுவில்
சந்திப்பு அட்டவணை Agora தூதர்கள் மற்றும் Agora ஃபவுண்டேஷன் அதிகாரிகள்
சந்திப்பு நடைபெறும் வளாகம் பொதுவில்
கிளப் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு தகவல் Agora தூதர்கள் மற்றும் Agora ஃபவுண்டேஷன் அதிகாரிகள்
கட்டண அமைப்பு பொதுவில்
கிளப் நிதிகள் Agora உறுப்பினர்கள்
பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள் பொதுவில்
சொற்பொழிவு உள்ளடக்க கட்டுப்பாடுகள் பொதுவில்
கிளப்பின் தொடர்பு தகவல் பொதுவில்
விருதுகள் மற்றும் பதக்கங்கள் பொதுவில்
கிளப் மொழிகள் பொதுவில்
   

 

Agora கல்வி மாடலை கடைபிடிப்பது

Agora கல்வி மாதிரியை கடைபிடிப்பதை பொறுத்தவரை, நிபந்தனைகள் உடைய கிளப்புகள் பொது கிளப்புகளின் அதே விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், பின்வரும் விதிவிலக்குகளுடன்:

  • பொது கிளப்புகள் இயற்றக்கூடிய பொது சொற்பொழிவு உள்ளடக்க கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக, நிபந்தனைகள் உடைய கிளப்புகள் கூடுதலாக அதில் உறுப்பினர்களாக சேருபவர்கள் விரும்பும் தலைப்புகளுக்கு ஏற்ப சொற்பொழிவில் பேசக்கூடிய விஷயங்களின் தலைப்பை வரைமுறையிடலாம், இந்த வரைமுறைகள் உறுப்பினருரிமை வரைமுறைகளுடன் தெளிவாக தொடர்புடையதாக இருக்கும் வரை.
  • உறுப்பினராக சேருவதற்கான தேவையாக திகழுகிற, கிளப்பை நடத்துகிற தொழில்முறை சங்கம் அல்லது நிறுவனத்தை விளம்பரப்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. உதாரணமாக, ஒரு கிளப் ACM-ஐ சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மட்டுமேயானது என்ற நிபந்தனையைக் கொண்டிருந்தால், கிளப்பில் ACM-ஐ விளம்பரப்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது.

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:01:07 CET by agora.